கண்ணிலே நீர் எதற்கு?

#ஜோதிரிவ்யூ

படைப்பு: கண்ணிலே நீர் எதற்கு

எழுத்தாளர் : காஞ்சனா ஜெயதிலகர்

வெளியீடு : ராணிமுத்து

ஜோதிகா:

 தேக்கடிக்கு அருகில் உள்ள தீவிற்கு தன்னுடைய பணி நிமித்தம் அங்கு வந்திருக்கும் நாயகி, தன்னை வரவழைத்த ராகவன் மீது காதல் கொள்வது போல தெரிகிறது. அவரோ மகளுடன் வந்து நிற்கிறார். ஆரம்பமே அதிர்ச்சி. யார் ஹீீீரோ என்று...

அதே தீவில் 'வனவாசம்' எனும் பெயரில் உணவு விடுதி நடத்தி வரும் நாயகன். படகில் தனிமையில் பயணம் செய்யும் நாயகியிடம் முதல் பார்வையிலேயே சீண்டலாக பேசுவதன் விளைவு, தொடர்ந்து சீண்டலும், ஊடலுமாக தொடர்கிறது.

திடீர் திடீர் என்று காணாமல் போகும் ராகவனின் வாழ்வில் உள்ள மர்மமென்ன? பிரியா அவரது மகள் என்றால் மனையாள்? ஜோதிகா யாரை விரும்புகிறாள்? யாரை கரம் பற்றுகிறாள்? என விறுவிறுப்பான கதைக்களம்.

மேமின் இந்த நாவல் தான் நான் முதன் முதலாக வாசித்தது. கிட்டத்தட்ட பத்து பதினைந்து முறை படித்து விட்டேன். ஒரு எழுத்தாளரின் முதல் படைப்பே மனதில் அழுத்தமாக பதிந்து, வருடங்கள் பல கடந்தாலும் மறக்காது என்றால் இதைத்தான் சொல்வேன் நான்.

அத்தனை அருமையான நாவல்.

தீபன் வரும் போதெல்லாம் சிரிப்பை அடக்க முடியலை. அதே நேரம் அவன் குறும்பை ரசிக்காமலும் இருக்க முடியலை! 'சின்னஞ்சிறு தேவி' என்று அழைத்துக் கெஞ்சும் இடமும், அவளை சதா கேள்வியால் கோபப்படச் செய்து, தாழ்ந்து போகின்ற இடமும் ரசனை!

ஞாயிறு அழைப்பும், அவனது விடுதியில் உல்லாச குளியலும், ஆட்டமும் மறக்கவே முடியாதது.

காட்டில் தனியாக மாட்டிக் கொண்டு அவள் படுகின்ற அல்லல்கள்... வாசிக்கையில் பாவமாக இருந்தது.

நாயகியின் மீதான அக்கறையும், அவ்வப்போது சீண்டலாக பேசி விட்டு பதிலுக்காக எதிர்பார்த்து நிற்பதும் ரொம்ப நன்றாக இருந்தது.

நளினாவின் கேள்விக்கான அவனது சீற்றமான பதில்கள்👌👌👌

நிஜமாகவே அட்டகாசமான படைப்பு. வருடங்கள் தான் ஓடுகிறது. ஆனால், வாசித்த நாவல் மறுபடியும் மறுபடியும் வாசிக்க சலிக்க வில்லை. மீண்டும் மீண்டும் தீபனின் வாயாடலே கண்களுக்குள் வந்து நிற்கின்றன. (இப்பவே இப்படி என்றால் இதற்கு முந்தைய பருவம் கொஞ்சம் சிரமம் தான் மேம்🤣🤣🤣🤣)

அழகான எழுத்து நடையில் ஒரு அட்டகாசமான கதைக்களம். அதன் நகர்வும், கதாப்பாத்திர வடிவமைப்பும் பிரமாதம்.

வனிதா, பிரியா, ரெஜி தம்பதியர், ராகவன், பார்த்திபன் எல்லாம் ஆங்காங்கே அழகாக பொருந்தி வருகிறார்கள்.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மேம்💐💐💐



Comments

  1. தயங்கி தடுமாறி நான் எழுதிய முதல் படைப்பிற்கு இத்தனைப் பாராட்டு...
    Am really amazed 🙏😊

    ReplyDelete

Post a Comment