ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : பார்கவி முரளி

படைப்பு : ஊடல் நீங்கி காதல் கொள்வோமா?

வெளியீடு : வைகை சிறுகதைப் போட்டி

லிங்:


காதலியை பிரிந்து இருக்கும் காதலன் அவளைப் பற்றிய முந்தைய நினைவுகளில் மூழ்கி கிடக்க, ஊருக்கு சென்று வந்ததில் இருந்து அவளோ பிரேக் அப் என்ற வார்த்தை மூலம் அவன் மனதை உடைத்து விட்டு என்னை தேடி வந்தா எங்கேயாவது போயிடுவேன் என்கிறாள். இருவருக்கும் இடையில் நடந்தது என்ன? நாயகியின் பிரேக் அப் எதனால் என்பதற்காக கேள்வியுடன் நம்மையும் அவர் பின்னே அலைய விடுகிறார்.

நாயகன் பாத்திரம் பாவம் தான். சதா பின்னாலேயே அலைய விடுறாங்க இந்த பொண்ணுங்க எல்லாரும், ஃபோன் உரையாடலும், அவனது பேச்சும் நன்றாக இருந்தது.

சட்டம் என்ன தான் தண்டனையை கடுமையாக்கினாலும், சமுதாயத்தில் மாற்றமே நிகழ்ந்தாலும் இம்மாதிரியான சாக்கடைகளை மாற்றவும் முடியாது. மாறவும் செய்யாது என்பதே நிதர்சனம்.

அவர்களுக்கு தண்டனை கொடுப்பதாக சென்றால்... நாயகியின் எண்ணவோட்டம் தான் எல்லோருக்கும் நிலவுகிறது. அதையும் மீறினால் பொதுவெளி, பத்திரிகை, தொலைக்காட்சியில் தலைப்பு செய்தியும், விவாத களமாக மாறி நிற்பதும் தான் சாத்தியம்.

சிறுகதை வாசிக்க நன்றாக இருந்தது. ஊடல் கதையாக எழுதிவிட்டு அத்துடன் சமூகத்தையும் இணைத்து விட்டுள்ளார் எழுத்தாளர். அவரது எழுத்தில் நான் வாசிக்கும் முதல் அனுபவம். எழுத்து நடையும், நகர்வும் அருமை சகோதரி.

நீங்களும் வாசித்து பாருங்கள் தோழமைகளே...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

Comments