ராதேஷ்யம்


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : தியாலெஷ்மி

படைப்பு : ராதேஷ்யம்

வெளியீடு : தியாலெஷ்மி நாவல்ஸ்

கதாபாத்திரங்கள் : ஷ்யாம் & ராதா 

லிங் :


வெளிநாட்டில் வசித்து வரும் நாயகனுக்கு, தன்னுடைய நண்பரின் மகள் தாயாரை இழந்து அப்பாவின் இரண்டாம் தாரத்தால் துயர் உறுபவளை திருமணம் செய்து வைக்கிறார் நாயகனின் அப்பா. ஆனால், அத்திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருக்கும் அவரது மனைவி, மகன் வந்த நேரத்தில் இருந்து பிரச்சனைய உருவாக்க, மணப்பந்தலில் மகனை மிரட்டி திருமணம் செய்ய வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

மனையாளை பிடிக்காமல் திருமணம் செய்யும் நாயகன், அவளிடம் வெறுப்பான வார்த்தைகளைக் கொட்ட, மறுபுரம் மாமியார் வில்லத்தனமாக நடந்து கொள்கிறாள். இந்நிலையில் அவளது வாழ்க்கை எங்ஙனம் நகர்கிறது? கணவன் மனைவியை ஏற்று வாழ்கிறானா இல்லை மறுபடியும் வெளி நாட்டிற்கே சென்று விடுகிறானா? ராதைக்கேற்ற கிருஷ்ணராக வருபவரால் அவளது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள், மாற்றங்கள் என்னென்ன என்பதை அருமையாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்காங்க.

ஆரம்பத்திலேயே நாயகன் வெளிநாட்டு பெண்ணுடன் பழக்கமாக வருவதை போல காண்பித்து, பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து ஆந்திரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை வார்த்தைகளால் காயப்படுத்துவது போல் நகர்கிறது. வெளிநாட்டு பெண்ணால் ராதாவின் வாழ்க்கையில் எப்போது, எந்த வடிவில் பாதிப்பு வருகிறதோ என்று பல நேரங்களில் எண்ணத் தோன்றியது.

கிருஷ்ணா பாத்திரம் அருமை. அவளிடம் காதலை சொல்லி திருமணம் புரிய கேட்ட இடம் வெகு எதார்த்தமாக பொருந்தியது.

மாமியார் மற்றும் சித்தி பாத்திரங்கள் சரியான பேஜாரி.

தங்கை மற்றும் நாயகனின் தம்பி பாத்திரத்திற்கு அதிக வாய்ப்பின்றி அவ்வப்போது வந்து சென்றாலும் மனதில் பதிகிறார்கள்.

மாமனார் மனதில் அழுத்தமாக தடம் பதிக்கிறார். சில நேரங்களில் யாருக்காகவும் பேச முடியாமல் திணறும் போது 👌👌👌

ராதாவிற்கு உதவிய நல் உள்ளங்கள் 👌👌 

நாயகனின் அடாவடியும், அவளை வார்த்தைகளால் வதைத்து துரத்தும் இடமும் வாசிக்க கஷ்டமாக இருந்தது. இருப்பினும் எத்தனை நாளைக்குத்தான் கத்துவான், பிறகு மாட்டுவான் தானே என்று நினைக்கவும் செய்தது🤣🤣🤣

தொடர்கதை இன்னும் நீளும் என்று எண்ணினால் சடாரென்று முடிந்து விட்டது. வெறும் 15 அத்தியாயம் தான் இருக்கிறது. வாசித்து பாருங்கள் தோழமைகளே...

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐



Comments

  1. மிக்க நன்றி சிஸ்டர்... அருமையான ரிவியூ...மிக்க நன்றி நேரத்தை ஒதுக்கி என் கதையை வசித்து விமர்சனம் சொன்னதற்கு♥️...

    ReplyDelete
  2. எப்போதும் போல் உங்க ரிவியூ அருமை... இதை விரைவில் முடிக்க வேண்டிய கதைக்களம் ஆதலால் விரைவாக முடித்துவிட்டேன்... நிறை குறை என இருந்தாலும் வாசகர்களாகிய நீங்கள் கொடுக்கும் ரிவியூ தான் மேலும் பலரை பல எழுத்தாளர்களை எழுத வைக்கிறது... ஒன்ஸ் அகெயின்
    மிக்க நன்றி சிஸ்டர்♥️🙏🙏

    ReplyDelete

Post a Comment