இயற்கை மேதினியை மீட்போமா?


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர்: விஸ்வதேவி

படைப்பு : இயற்கை மேதினியை மீட்போமா?

வெளியீடு : வைகை பதிப்பகம்

 கதாபாத்திரங்கள்: ஆதர்ஷ்; தீக்ஷண்யா 


ஆரம்பமே நாயக நாயகியின் திருமணம். அடுத்து, திருமணமான தம்பதியருடன் சென்னைக்கு  கிளம்புகிறார்கள். நாயகன் வேலையில் எப்போதும் பிஸியாக இருப்பவன். வீட்டிற்குள் வந்தாலோ சதா ஃபோனுக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான். ஒருவரையொருவர் பேசிப் பழகிய பின் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று கூறுபவன், பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கிறானா? இல்லை அலுவலகம் மற்றும் போன் உடனே சதா காணப்படுகிறானா?

அவளது படிப்பு, ஆங்கிலம் கற்க சொல்வது, உடை, அலங்காரம் என்று பலதையும் கண்டு அதிருப்தி அடைபவனின்  நடவடிக்கையும், செயல்பாடுகளும் இருவருக்கும் இடையில் ஏற்படுத்துவது என்ன?

அலுவலத்தில் இருந்து இரண்டு நாள் சுற்றுலாவிற்கு மனையாள் வர மாட்டாள் என்று கூறி தனியாக செல்ல நினைப்பவனை, ஒரு தலையாக காதலித்து வருபவள், தன்னுடைய காதலை சொல்லி மீண்டும் அவனுடன் இணைய நினைக்கிறாள். அவளது எண்ணங்கள் ஈடேறுகிறதா? ஏற்கனவே தன்னை அவனுக்கு பொருத்தமில்லாதவள் என்று பிறர் கூறுவதைக் கேட்டு முகம் வாடும் நாயகி, தற்சமயத்து சுற்றுலா விசயத்தில் தன்னை அழைக்காமல் அவன் செல்லவும் எடுக்கும் முடிவென்ன? போன்ற பல கேள்விகளுடன் கதைக்களம் அழகாக நகர்கிறது.

நாயகியின் குணாதிசயம் வெகுவாக நம்மை ஈர்க்கிறது. இந்த காலத்தில் சதா கைப்பேசியின் உதவியுடன் விளையாடி, வெளி உலகை காணாமல் சோம்பேறித்தனம் நிறைந்து கிடக்கும் பிள்ளைகளை அதில் இருந்து மீட்டு கொண்டு வர முயற்சிப்பதை பற்றியும், இன்ஷ்டாகிராம், மெட்டாவர்ஸால் ஏற்படும் தீமைகளை பற்றியும் அருமையாக சொல்லியிருக்காங்க.

 ஆதர்ஷ் பாத்திரம் அருமை. நிஜமான கணவன் பாத்திரம். மனையாளின் பெயர், படிப்பு எதுவும் தெரியாமல் புகைப்படத்தில் பார்க்கவும் செய்யாமல் மணந்து விட்டு, அதை தெரிந்து கொள்ள முயல்வதும், அவளது முறைப்பு, கோபம், விலகி ஓடுவதை கண்டு கொள்ளாமல் துரத்தி செல்லும் போதும் ரொம்ப நன்றாக இருந்தது.

நாயகியின் மாமியாராக வருபவர் மனதில் பதிகிறார். 

தருண் மோஷம். என்ன தான் நண்பன் என்றாலும், இப்படியா அவனை இன்சல்ட் பண்றது? பொறாமை பிடிச்சவன். சரியான அடி🤣🤣🤣🤣 'ஆங்கில கிராமர் ' வரிகள்.

வயதான தம்பதியர் வருகின்ற இடங்கள் வாசிப்பிற்கு நன்றாக இருந்தது.

நிகிலன், கவின் சிறுவர்கள் பாத்திரம் ஸோ கியூட். நாயகியின் பேச்சும், அவர்களுக்கு உதவியதும்👌👌👌

சிஸ்டரின் நாவலில் இதுதான் நான் முதன் முதலாக வாசிப்பது. ரொம்ப ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க. கருத்தான கதைக்களம். சலிப்பின்றிய நகர்வு. இறுதியில் வந்த கவிதை வரிகள் பிரமாதம் 👏👏👏

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

 

Comments