நீ எந்தன் சுவாசமாய்...!


#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஜோவிதா

படைப்பு : நீ எந்தன் சுவாசமாய்...!

வெளியீடு : அருணோதயம்

ஆகாஷ் :

காவல் அதிகாரியின் மகனான இவர், வெளியிடங்களில் வசித்து வந்தாலும் தன் அத்தையின் மகள் மீதான காதலில் மூழ்கி வருடங்கள் பலவாக காணப்படுகிறார். அத்தையின் வீட்டிற்குச் செல்பவன், அவளைக் காண தவிப்பதும், அவளிடம் தன் உள்ளக்கிடக்கை வெளிப்படுத்துவதும் அத்தனை அருமையாக இருந்தது.

ஆனால், அனைவரிடமும் நன்றாக பேசும் நாயகி, அவனைக் கண்டாலே சீறி விழுவதுடன், அவனது காதலை ஏற்க மறுத்து, தான் வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

நாயகனின் காதல் ஈடேறுகிறதா? நாயகி விரும்புவது யாரை, அவளது காதல் நிறைவேறுகிறதா? நாயகனை பார்க்கும் நேரமெல்லாம் வெறுப்புடன் அக்னியாக வார்த்தைகளை கொட்டுவதன் காரணம் என்ன? அவளது காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்கிறார்களா? அவர்களது உறவு, நட்பு? போன்ற கேள்விகளுடன் கதைக்களம் அருமையாக நகர்கிறது.

ஜோவி டியர்,

உங்க நாயகி ரொம்ப மோசம். என்ன இருந்தாலும் இதெல்லாம் ரொம்ப ஓவர். அவளது பேச்சால் அவன் ஒவ்வொரு முறையும் காயப்படும் போது பாவமாக இருந்தது. அதிலும், அவளது கடுமையான பேச்சால் வருத்தப்பட்டு சென்று விபத்துக்குள்ளாகி எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தும் கொஞ்சம் கூட அவன் மீது இரக்கமே இல்லையே!

அவளது உதாசீனம், கோபம், வேறு ஒருத்தரை விரும்புறேன்னு சொல்லியும் அவனது காதலை அவளிடம் கூற நினைத்து அவமானப்பட்ட இடம் ம்ப்ச்... நிஜமாவே கண்ணீர் வந்துட்டது.

ரியலி ஆகாஷ் கிரேட்.

கவிதைகளை வாசிக்கும் நாயகி எழுத்தினூடு அவனையும் நேசித்து காதலை சொன்ன இடம் நன்றாக இருந்தது. ஆனால் ரேகாவின் மனநிலை தான் எனக்கும். அவளது காதலை ரசிக்க முடியலை. ஏற்கவும் முடியல! அந்த அளவுக்கு ஆகாஷ் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி விட்டான்.

பெற்றோராக வந்த அனைவரும் வெகு சிறப்பு. மனோரமா பாட்டி அல்டிமேட் பாட்டி.

ஒரே மூச்சில் மொத்தமா படிச்சு முடிச்சுட்டு தான் கீழே வச்சேன். ஆகாஷ் என்ன ஆவானோ? இவள் யாரை காதலிக்கிறாளோ? யாரைக் கட்டிப்பாளோன்னு டென்சனா போச்சு... ஆனால் அவள் காதலிச்சவன் யார்னு தெரிஞ்சதும் அடடா!! இப்படி ஆகிட்டதேன்னு நினைப்பதை தவிர வேறு வழியில்லை.

போன் உரையாடல்கள்🤣🤣🤣 டாடா, டிடி 

ஆகாஷின் குறுப்புத்தனமான பேச்சும், சீண்டலும் சிரிப்பு சிதறல்கள் என்றால், நண்பர்கள் பட்டாளம் வருகின்ற இடங்கள் அனைத்தும் நகைச்சுவை தூறல்கள்.

இடை இடையே வந்த கவிதை வரிகள் 👌👌👌 சூப்பர் ஜோவி.

நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருந்தது. அழகான எழுத்து நடையில் ஒரு அருமையான கதையோட்டம்.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும், என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐

Comments