மியாவ் மியாவ் பூனை

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : மியாவ் மியாவ் பூனை

வெளியீடு:  விகடகவி

லிங் :

மகன் வழி பேத்தி அவரது தாதாவிடம் தன்னுடைய பிறந்த நாள் பரிசாக நாய் வாங்கி கேட்க, அவரோ  மறுத்து பூனை வாங்கித் தருகிறேன் என்று கூறுகிறார்.

பூனை என்றதும் அதைப் பற்றி கேட்பவளிடம், பூனையின் வகைகள், அமைப்பு, அதை வளர்க்கும் முறை, இஸ்லாமிய மதத்தில் அது வளரப்பட்ட விதம் என நிறைய தகவல்கள் அருமையாக கொடுக்கப்பட்டுள்ளன.

பூனையில் இத்தனை விதமும், அதை வளர்ப்பதில் இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து ஆச்சர்யமாக போயிற்று.

தெரியாத பல தகவல்கள் புதியதாக இருந்தன. எப்பவும் போல உங்க சிறுகதை வாசிக்க நன்றாக இருந்தது சார்.

தாதா மற்றும் பேத்தியின் உரையாடல் மனதில் பதிகிறது.

மேலும் நிறைய எழுத வாழ்த்துகள்💐💐💐

*****

எழுத்தாளர் : ஆர்னிகா நாசர்

படைப்பு : தொலையாதே என் கனவே

வெளியீடு : விகடகவி

லிங் 

சென்னையில் நடக்க இருக்கும் புத்தக திருவிழாவிற்கு புத்தகங்கள், கவிதை தொகுப்புகளை எழுதுவது, அதை வியாபாரம் செய்யும் தந்திரம் என்று சிறுகதையின் நகர்வு மாஸ்.

சிறுகதையை முழுவதும் வாசித்ததும் புரிந்து விட்டது.🤣🤣🤣 இது எதற்கான உரையாடல் என்று.

ஒரு கவிதைப் புத்தகத்தின் விலை 2000 / 3000 அதை விற்பனை செய்ய எழுத்தாளர் எடுத்த இராஜதந்திரம் அட்டகாசம்.

நிஜம் தான். திறமையான எழுத்தாளர்; மேடை பேச்சாளர். பதிப்பகத்தை நடத்துபவர், ஒரு கட்சியில் உள்ள வாதகங்களை சாதமாக பேசி எதிராளியை வாயடைக்க வைக்கும் திறமைசாலி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவுக்கு திறமையும், ஆளுமையும் நிறைந்த எழுத்தாளர் அவர். ஆனால் நான் சொல்வதை விட நீங்களே வாசித்துப் பார்த்தால் சிறுகதை எப்படி இருக்கிறது என்பது நன்றாக புரியும்.

நிஜ சம்பவங்களை அழகாக சிறுகதையாக வடிவமைத்திருக்கிறார்கள். வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கிறது.

மேலும் நிறைய எழுதவும் விருதுகள் பல வாங்கவும் மனமார்ந்த வாழ்த்துகள் சார்💐💐💐

Comments