நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி! பாகம் - 2


அத்தியாயம் 1
























ருக்குமணி செங்கோட்டுவேல் நாமக்கல்  சகோதரியின் விமர்சனம் :


🙏🌹 சூப்பர் சிஸ்டர் இனிய அருமையான பதிவு வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌 உங்கள் கதைகளில் இந்த கதை ஒரு மயில் கலாய் இருக்கிறது தாத்தா அருணாச்சலத்தின் மகளின் மறுமணம் முடிவு அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கிறது தன் மகளுக்காக தன் பேத்தியின் தான் எடுத்து வந்து வளர்த்தி கொண்டு அவருக்கு நன்மை செய்கிறார் மறுமணம் என்பது ஏற்றுக்கொள்ளாத காலத்திலேயே அவர் இதனை சிறப்பாக செய்கிறார் அவருக்கு ஜவகர் மருமகன் சிறப்பானவர் தன் மகள் சாதனாவின் திருமணத்திற்கும் எண்ணத்திற்கும் மிகவும் மதிப்பளிக்கிறார் விக்னேஷ் தன் மனைவியை சாதனா வை சாதிக்க வைக்க எடுக்கும் முயற்சி அருமை. போலீஸ்க்கு ஏற்ற பொண்டாட்டி சாதனாவின் துப்பறிவு அருமை .
மருத்துவ பணி மக்களின் பணி இல்லாமல் கடவுளின் பணி என்பதை குணசேகரன் தன் மகனுக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் நிரூபிக்கிறார். மகாலட்சுமி தன் மகளின் திருமணத்தை கணவனின் அனுமதியில்லாமல் முடித்து வைத்தாலும் அது மன வருத்தத்தை சமாளிக்கிறார். அன்பும் கூட்டு குடும்பமும்.காதலும் சிறப்பாக வைத்திருப்பதில் ஜவஹர் மகாலட்சுமி குடும்பமும் விக்னேஷ் அருமையாக உணர்த்திருக்கிறார்கள் .
இறுதி அத்தியாயங்கள் இரண்டும் அருமை சிஸ்டர் பயங்கர விறுவிறுப்பு மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் மிகவும் அருமை சிஸ்டர் 👌👌 வாழ்த்துகள் 💐💐

*****

சல்மா சல்லு சகோதரியின் விமர்சனம்:

அருமையான கதை.. விக்னேஷ் சாதனா ரெண்டு பேரும் அழகான ஜோடி.. விக்ரம் நந்தினி காதல் போல இவங்க ரெண்டு பேரோட அன்பும் அழகா இருந்தது.. விக்ரம் விக்னேஷ் குடும்பத்துல மட்டும் இல்லாம அவங்களோட தொழிலுக்கும் உண்மையா இருக்காங்க.. ஜவஹர், மகாலட்சுமி, பிரசாத், விவேக் எல்லாரும் நிறைவான கதாப்பாத்திரங்கள்... மருத்துவ உலகில் நடக்கும் மோசடி வெளியில் தெரிந்து அந்த குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைத்தது.. மொத்தத்தில் அழகான குடும்ப கதை படித்த நிறைவு 👌👌👌


******

மீனாட்சி நாகேந்திரன் சகோதரியின் விமர்சனம் :

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி நல்ல பேர் இது விக்ரம்,விக்னேஷ்,பிரசாத் மூணு பேருக்கும் பொருத்தமா இருக்கு.
மகாலெஷ்மி நல்ல Character சின்ன வயதிலேயே கணவன் இறந்தாலும்
மறுமணம் செய்து படித்து மருத்துவர் ஆவது,அதற்கு கணவன் ஜவஹர் உதவி செய்வதை மிகவும் நன்றாக சொல்லப் பட்டுள்ளது 
சமூகத்திற்கு நல்ல புரட்சிகரமான விஷயம் அடுத்தது சாதனா பெற்றோர் யாரென்று தெரியாத பெண்ணை எடுத்து வளர்த்து மருத்துவராக்குவது பெரிய விஷயம் .விக்ரம் நந்தினி பவித்ராவை எடுத்து வளர்ப்பது
நந்தினியை தன்னைப்போல் பெரிய நிலைக்குக் கொண்டு வருவது (வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாகி விட்டார்) நல்ல திருப்பம் அருணாசலம்(நந்தினியின் தாத்தா)நந்தினிக்கு செய்தது தவறு என்றாலும் மஹாலெஷ்மிக்காக பொறுத்துக் கொள்ளலாம் மாணவியின் கொலையைக் கண்டு பிடிப்பது என்று பல நல்ல விஷயங்கள் ஒரே கதையில் நல்ல விதமாக சொல்லப்பட்டுள்ளது 
நன்றி ஜோதி ALL THE VERY BEST for yr future WRITTING thx

*******
.

Comments