இச்சாதாரி பற்றி தெரியாத தகவல்


இச்சாதாரி நாகங்கள் மனிதராக உருமாறும் என்பது உண்மையா? இச்சாதாரி நாகம் பற்றி தெரியாத பல ரகசியங்கள்...!
By Saran Raj| Updated: Monday, April 8, 2019, 17:05 [IST]
இந்தியா பல நம்பிக்கைகளும், கலாச்சாரங்களும் கலந்த நாடாகும். இங்கு ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் என தனிப்பட்ட நடைமுறைகளும், நம்பிக்கைகளும் இருக்கிறது. ஆனால் சில நம்பிக்கைகள் மட்டும் அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொதுவானதாக இருக்கும். அப்படி இந்தியா முழுவதும் மக்களுக்கு இருக்கும் ஒரு பொதுவான நம்பிக்கை இச்சாதாரி நாகங்களை பற்றியதாகும்.


Icchadhari Nagins
இச்சாதாரி நாகங்களை பற்றி பல படங்கள், நாடகங்கள் மற்றும் கதைகள் என பலவற்றை நாம் பார்த்திருப்போம். இது கட்டுக்கதையா அல்லது மூடநம்பிக்கையா அல்லது உண்மையிலேயே இச்சாதாரி நாகங்கள் இருக்கிறதா என்ற கேள்விகள் நமக்குள் சிறுவயதிலிருந்தே இருக்கும். இச்சாதாரி நாகங்கள் பற்றி உங்கள் மனதில் இருக்கும் அத்தனை கேள்விகளுக்கும் இந்த பதிவில் பதிலை பார்க்கலாம்.

புராணங்கள் மற்றும் நாட்டுப்புற கதைகளின் படி இச்சாதாரி ஆண் நாகமும் சரி, பெண் நாகமும் சரி சராசரி பாம்பின் வடிவத்தில்தான் இருக்கும். ஆனால் அவற்றால் எந்த உயிரினத்தின் வடிவத்தை வேண்டுமென்றாலும் எடுக்க இயலும். ஆனால் அவை பெரும்பாலும் மனித உருவத்தை எடுக்கவே விரும்பும் என்று கூறப்படுகிறது.

இச்சாதாரி நாகங்கள் இன்றும் இருக்கிறதா?
இச்சாதாரி நாகங்கள் இன்றும் இருக்கிறதா?
படங்களில் காட்டப்படுவது போல இன்றும் நம் உலகத்தில் இச்சாதாரி பாம்புகள் இருக்கிறதா? இந்த கேள்வி அனைவரின் மனதிற்குள்ளும் இருக்கும். நமது நாட்டில் சந்தால் பர்கானாஸ் என்ற பெண்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை பாம்பின் விஷத்தை கொண்டு தாக்குவார்கள். எதிரிகளை தாக்க இவர்கள் பயன்படுத்தும் இந்த விஷம் மிகவும் வலிமை வாய்ந்தது. இதனால் உடனடி மரணம் கூட ஏற்படலாம்.

நாகமணியின் ரகசியங்கள்

நாகமணியின் ரகசியங்கள்
இச்சாதாரி நாகங்களிடம் அவர்களுக்கே உண்டான தனிசிறப்பான நாகமணி இருக்கும் என்று புராணங்கள் கூறுகிறது. இது வைரத்தை விட பலமடங்கு மதிப்புள்ளதாகும். உலகின் மிகவும் புனிதமான 9 இரத்தினங்களில் நாகமணியும் ஒன்றாகும். இது எப்படி உருவாகிறது எனில் ஸ்வாதி நட்சத்திரத்தில் மழை பெய்யும் பொழுது நாகத்தின் வாயில் விழும் மழைநீர் நாகமணியாக மாறும் என்று கூறப்படுகிறது. நூறு ஆண்டுகள் வாழ்ந்த இச்சாதாரி நாகத்திற்கு மட்டுமே இந்த அற்புதம் நிகழும் என்று கூறப்படுகிறது.

நாகமணியின் மகத்துவம்
நாகமணியின் மகத்துவம்
நாகமணி இச்சாதாரி நாகத்தின் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். ஒளிரும் முத்தான இது அதன் இரையை தேட உதவியாக இருக்கும். இது அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும், இது இருப்பவர்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் வந்து சேரும் அவர்கள் விரும்பும் அனைத்தும் நடக்கும். புராண குறிப்புகளின் படி நாகமணியை பாம்பிடம் இருந்து பிரித்து விட்டால் அது இறந்துவிடுமாம்.

MOST READ: மகாபாரத போரில் உயிர் பிழைத்த துரியோதனனின் ஒரே ஒரு சகோதரன் யார் தெரியுமா?


அக்னி புராணத்தில் இச்சாதாரி நாகம்
அக்னி புராணத்தில் இச்சாதாரி நாகம்
அக்னி புராணத்தின் படி பூமிக்கு கீழே பாதாள உலகம் இருக்கிறது. இது ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தைத்ய மற்றும் தானவர்கள் பூமிக்கு கீழே வாழ்கின்றனர். விஷ்ணுவின் சேஷ நாகமும் பூமிக்கு கீழ்தான் வசிக்கிறது. போமியை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பது சேஷ நாகத்தின் தலைதான்.

வாயுபுராணமும், சேஷ நாகமும்
வாயுபுராணமும், சேஷ நாகமும்
வாயு புராணத்தின் படி அசுரர்களும், நாகங்களும் பூமிக்கி அடியில் வசித்து வந்தனர். அதாள லோகம் அசுரன் நமுச்சியாலும், சூதள லோகம் அசுரன் மஹாஜம்பனாலும், விதாள லோகம் அசுரன் பிரகலாதனாலும், கபஸ்தல லோகம் அசுரன் காலநேமியாலும், மஹாதல லோகம் அசுரன் விரோச்சனாலும், ஸ்ரீதல லோகம் அசுரன் கேசரியாலும், பாதாள லோகம் அசுரன் அசுரன் பலியாலும் ஆளப்பட்டது.

நாகமணியின் நிறம்
நாகமணியின் நிறம்
வேதங்களின் படி நாகமணிகள் பல்வேறு நிறங்களில் காணப்பட்டது. பெரும்பாலும் அவை மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். மேலும் தேன் நிறம், சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

இச்சாதாரி பாம்புகள் இருக்கிறதா?
இச்சாதாரி பாம்புகள் இருக்கிறதா?
இச்சாதாரி பாம்புகள் இருக்கிறதா? இல்லையா? என்பது விடை தெரியாத கேள்வியாக இருக்கலாம். ஆனால் இயற்கையாவே உடலில் விஷம் இருக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சிலர் செயற்கை முறையில் விஷத்தை உடலில் ஏற்றி தன் உடலை விஷமாக மாற்றிக்கொள்கின்றனர். விஷம் இவர்களை ஒன்றும் செய்வதில்லை. இவர்கள் இச்சாதாரி பாம்பின் மறுவுருவமாகவே கருதப்படுகின்றனர். இவர்களின் வேலையே மற்றவர்களை கொள்வதுதான்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் எப்பொழுதும் பிறருக்காக தியாகம் செய்ய தயாராய் இருப்பார்களாம்...!

சந்தல் பர்கானாஸ்
சந்தல் பர்கானாஸ்
சந்தல் பர்கானாஸ் என்பவர்கள் இந்தியாவின் பல கிராமங்களில் வாழும் குறிப்பிட்ட இன மக்கள் ஆவார்கள். இவர்கள் எப்பொழுதும் தங்களுடன் கொடிய விஷம் தடவப்பட்ட பொருட்களை வைத்திருப்பார்கள். தங்களுக்கு ஆபத்து என்று உணரும் தருணத்தில் இவர்கள் அதனை பயன்படுத்துகின்றனர். மற்ற மக்கள் இவர்களை வாழும் இச்சாதாரிகள் என்று அழைக்கின்றனர்.





Comments