முட்டக்கண்ணி முழியழகி

#ஜோதிரிவ்யூ 

எழுத்தாளர் : வதனி பிரபு

படைப்பு : முட்டக்கண்ணி முழியழகி

வெளியீடு : வைகை தளம்

லிங் : 



கனலி :

குறும்பு தனமான சேட்டைகளால் வீட்டையே அல்லோகலப்படுத்தும் நாயகி, சிறு குழந்தைகளுடன் இணைந்து கொண்டு, பாட்டிகளையும், வீட்டாரையும் படுத்தி எடுக்கிறார். சொந்த அத்தை மகனை திருமணம் செய்து கொள்ள விரும்பாமல் வீட்டை விட்டு சென்று அவர்களின் அழுத்தத்தையும் அதிகரிக்கிறார்.

அடாவடி, குறும்புத்தனம், சேட்டைகளால் அனைவரையும் சிரிக்க வைக்கும் நாயகியின் திருமணம் யாருடன் நடக்கிறது? அத்தை மகனை வெறுப்பதற்கான காரணம்? அவளிடம் காணப்பட்ட அதிரடியான மாற்றம் எதனால்? என்பதை கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

முதல் பாதி சிரித்து சிரித்து முடியல. நிலவனும் & கனலியும் மாறி மாறி கலாட்டா செய்து ஒரு வழி பண்றாங்க. சிரிச்சுட்டே படிச்சுட்டு இருக்கும் போது திடீர்னு களம் மாறி அழுத்தமாக பாதைக்கு போயிட்டது. அதன் பிறகு சமூகம் தூக்கலாக வருது.

பாட்டிமார், குழந்தைகளுடன் அடிக்கும் கலாட்டாவும், நாயக நாயகியின் உரையாடலும், ஊடலும் கூடலும், குடும்பத்தினரின் அனுசரிப்பும், அன்பான வார்த்தைகளும் வாசிக்க ரசனையாக இருக்கிறது.

கதையில் வருகிற இன்னொரு ஜோடியும் மனதை கவர்கிறார்கள்.

ஷாலினி ஆரம்பத்தில் இருந்து அமைதியாக வந்து பின் அவரும் கோபமுகத்தை காட்டுகிறார். அவரது முன்கதை சுருக்கம் படிக்கறப்போ பாவமா இருந்தது.

குட்டி பிள்ளைகள் பாட்டியின் பேச்சு ரொம்ப ரொம்ப நன்றாக இருந்தது.

அமைச்சரே நமக்கு இதெல்லாம் தேவை தானா? சொல்ல வேண்டும் என்றால் கதை பற்றி இன்னும் நிறைய சொல்லலாம். பட், நான் சொல்வதை விட நீங்களே வாசித்து தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும். முடிவு👌👌👌

எழுத்து நடை அருமை. கதையோட்டம் மனதை கவர்கிறது.

மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெறவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐

Comments