தணலாக வீசும் பூந்தென்றலே!

#ஜோதிரிவ்யூ

எழுத்தாளர் : Chitra Devi

படைப்பு : தணலாக வீசும் பூந்தென்றலே

வெளியீடு : வைகை தளம்

தென்றல் :

பெயருக்கு ஏற்றார் போல் இளந்தென்றலாக வீசி சுகத்தை கொடுக்கின்ற பெண்ணவள். திடீரென புயல் காற்றாக மாறி வருகிறாள். அதற்கான காரணம் யார்? எதற்காக அப்படி ஒரு நிலை உருவாகியது? என்பதை தொடர்கதையின் வாயிலாக அருமையாக சொல்லி இருக்காங்க.

அண்ணியின் தம்பியை விரும்பும் நாயகி, அவனுக்கு பிடிக்க வில்லை, பெண் கொடுத்து பெண் எடுப்பதில் வீட்டில் பெற்றோருக்கு விருப்பமில்லை என்று அவளது அண்ணி கூறியதால், வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டு, சில நாட்களே ஆன நிலையில் விவாகாரத்தாகி வந்து நிற்கிறாள்.

அவளது வாழ்வில் நடந்தது என்ன? எதனால் விவகாரத்து நடைபெறுகிறது? எதனால் அண்ணியின் தம்பியை மணக்க முடியாமல் போகிறது என்பதை தொடர்கதையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அண்ணி கதாபாத்திரத்தின் கடுமை வாசிக்கும் போது கோபத்தை கிளறுகிறது. நாயகன், கணவன் இருவரும் இரு துருவங்கள் என்றே நினைக்க தோன்றியது.

நாயகன் வரும் இடம் அத்தனையும் ரசிப்பு தன்மையை தோற்று விக்கிறது. தென்றலின் குழுமையும், சீற்றமும் வாசிக்க நன்றாக இருக்கிறது.

எழுத்து நடையில் கவனம் செலுத்தி, இன்னும் சற்று பெரியதாக எழுதி  இருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும். தொடர்கதை வாசிக்க அருமையாக இருந்தது. வேகமாக சென்று விறுவிறுப்பாக நகர்ந்து சடாரென்று முடிந்து விட்டது.

மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்💐💐💐

Comments