அக்னி தீர்த்தம் விமர்சனங்கள்

அக்னி தீர்த்தம் விமர்சனம்



நர்மதா சகோதரியின் விமர்சனம் :



அக்னி தீர்த்தம் 😍😍😍😍😍😍.



வீரபாண்டியன் -தேவசேனா 

❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️🧡❤️



 சந்திரசேனன்-யமுனா

💞💞💞💞💞💞💞💞💞💞💞



விநாயகம் -சகுந்தலா 

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️



ஸ்ரீநிதி🥰🥰🥰🥰🥰🥰🥰



ஜெயக்குமாரி, விஷ்னுபிரியா, சங்கீதா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.



அருணாசலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



கதையின் ஆரம்பம் முதலில் இருந்து நிறைவு வரை எங்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி கதையை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள் சகோதரி😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.



 வீரபாண்டியன் உண்மையில் ஊர் போற்றும் மன்னன் தான் அவனது சரி பாதி தேவசேனா மகாராணி தான் இருவரும் அவ்வளவு அழகான ஜோடிகள்💞💞💞💞💞💞💞💞💞.



 வீராவின் ஒவ்வொரு செயலும் அதில் உள்ள நன்மைகளும் குடும்பம் மட்டுமின்றி சுற்றியுள்ள மக்களையும் செழுமையாக வைத்திருந்தது🙏🙏🙏🙏



 வீரபாண்டியன் மனதின் காதல் தேவதையான தேவசேனாவை பல இன்னல்களைக் கடந்து திருமண பந்தத்தில் இணைந்து இன்று மகிழ்ச்சியுடன் வாழ்வதை காணும் பொழுது நெகிழ்ச்சியாக உள்ளது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.



 யமுனா சந்திரசேனனுடன் இறுக்கமான மனநிலையில் திருமண பந்தத்தில் இணைந்தாலும் பிறகு புரிதலுடன் வாழக்கையை வாழ்வது மகிழ்ச்சி ☺️☺️☺️☺️☺️☺️☺️.

 

ஜெயகுமாரி பிள்ளைகளை வீரத்துடனும், விவேகத்துடனும், கருணையுடனும் வளர்த்திருக்கிறார்🙏🙏🙏.



விஷ்னுபிரியா தேவசேனாவை நன்முறையில் வளர்த்து அவளுக்கு பக்க பலமாக வாழ்ந்த தெய்வ தாய்🙏🙏.



 அருணாச்சலம் என்ன சொல்ல கதையின் ஆரம்பத்தில் இவருடைய போக்கும் செயலும் கோபத்தை ஏற்படுத்தியது ஆனால் நண்பனால் ஏமாற்றப்பட்டு துரோகத்தால் அவருடைய வாழ்க்கையே புயலில் சிக்கியது போல ஆகிவிட்டது😔😔😔😔😔😔😔, மனைவிக்கு தான் செய்தது அநீதி என்று மனம் வருந்தி அவர் கதறிய பொழுது கண்கள் கலங்க செய்தது🥺🥺🥺 அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து மகளுடன் இனியாவது நிம்மதியாக வாழட்டும் என்று நினைத்தபோது மகளின் வாரிசாக மகளின் அரவணைப்பில் வாழ ஆசை கொண்டு இறைவனடி சேர்ந்து மனதை கனக்க செய்து விட்டார்🙏🙏🙏.



 ஸ்ரீநிதி தங்க குட்டியின் மழலை மொழியும், அழகிய நடனமும், வீரபாண்டியன் மீது இந்த பிஞ்சு கொண்ட பாசமும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது🥰🥰🥰🥰🥰🥰🥰.



 கதையின் நிறைவு மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது☺️☺️☺️☺️.



[USER=3908]@Anantha jothi[/USER] சிஸ்டர் உங்கள் கதையை நான் முதன்முதலில் இப்பொழுதுதான் படிக்கிறேன் தெளிவான எழுத்து நடை சுவாரசியம் துளியும் குறையாமல் கதையை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள்🥳🥳🥳🥳🥳🥳🥳🥳



 போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐
*****

எழுத்தாளர் மோகனா சின்னதம்பியின் விமர்சனம் :


#அக்னிதீர்த்தம்

ஒரு நல்ல குடும்ப கதை அதுவும் கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குற கதை 😍

வீரா அத்தானையும் தேவாவையும் அத்தனை பிடித்து இருந்தது..

கதையில் வந்த ஒவ்வொருத்தரும் அத்தனை நேர்த்தியான கதாபாத்திரம்...

எந்த இடத்திலும் கதை தொய்வில்லாமல் நகர்ந்துது 😍..

ஜோ வின் எழுத்து மிக அருமை 😍

இந்த கதையின் தலைப்பு ஏன்னு கண்டிப்பா நீங்க தெரிஞ்சிக்க இந்த கதை படிக்கலாம்...

எழுத்தும் எழுத்து நடையும் உங்களை முழுதாக படிக்காமல் விட முடியாது...

All the best ஜோ 😍

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 😍

****

சாந்தி நாகராஜ் சகோதரியின் விமர்சனம் :


#அக்னிதீர்த்தம்

#விமர்சனம்

 குடும்பம்,பாசம்,காதல் பகை எல்லாம் கலந்து ஒரு பீல் குட் கதை

ஒரு குடும்பத்தில் ஏற்படும் புரிதலின்மையாலும்,
 அவசரத்தினாலும் பேசும் பேச்சுகளால் ஏற்படும் இழப்புகளையும் பகையையும் ரொம்ப எதார்த்தமா கொண்டு போன விதம் அருமை 👌👌👌

 நிறைய கேரக்டர்களை வைத்து அவர்களை கதையில் சரியாக கொண்டு போய் அவர்களின் கேரக்டர்களை வடிவமைத்த விதம் பாராட்டுக்குரியது 👏👏👏

 வீரபாண்டியன் பெயருக்கு ஏத்த மாதிரி கம்பீரத்தோடு வலம் வருபவன் குடும்பத்தின் மீது மட்டுமின்றி சுற்றியுள்ளவர்களின் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்களுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் செயல் சூப்பர் 👌👌👌

 தேவசேனா வீரபாண்டியனின் காதல் மனைவி.
 இவளுடைய ஒவ்வொரு உணர்வுகளும் ரொம்ப அருமை. ஆரம்பத்தில் வீராவுடன் செய்யும் குறும்பும், திருமணத்திற்குப் பிறகான அவளின் கோபம், விலகல், தவிப்பு, என ஒவ்வொரு உணர்வுகளும் அருமை 👏👏👏

 வீரபாண்டியன் தேவசேனா புரிதலும் காதல் காட்சிகளும் அவ்வளவு அருமையாக இருந்தது.❤️❤️

 வீராவின் பொறுமையும், எல்லா தரப்பில் இருந்தும் யோசித்து அவன் எடுக்கும் முடிவுகளும் இவன் இவ்வளவு நல்லவனா இருக்கானே என்று நினைக்க வைக்குது 😍😍

 மகனை நினைத்து ஜெயக்குமாரின் தவிப்பும், இறந்த தந்தையின் மீது விழுந்து தேவசேனா கடைசி வரை உங்களை அப்பானு கூப்பிட முடியாமல் போயிடுச்சே என்ற அழுகையும் ரொம்ப உணர்வுபூர்வமாக இருந்தது 👏👏

 வீரபாண்டியன் நாடகத்தில் ஆரம்பமாகும் கதை அதே வீரபாண்டியன் நாடகத்தில் முடிவது

 நிறைய ட்விஸ்ட்களோடு விறுவிறுப்பாகவும் ரொம்ப நிறைவாகவும் இருந்தது கதை சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐

*****

சல்மா சாலு சகோதரியின் விமர்சனம் :

"அக்னி தீர்த்தம்" அருமையான குடும்பக் கதை.. 

வீரா, தேவசேனா கதையின் நாயகன் ; நாயகி

  வீரபாண்டியன் குடும்ப பொறுப்புள்ள ஆளுமையான மகன்...தம்பிக்கு திருமணம் முடித்து தம்பி மகளை தன் மகளாக நினைத்து பாசம் கொட்டி வளர்க்கிறான்.. குடும்பத்தில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளால் திருமணத்தை தவிர்த்து குடும்ப நன்மைக்காக வாழ நினைப்பவன் ... ஒரு கட்டத்தில் தேவசேனா மனைவி ஆகிறாள்... ஆனால் இருவரும் சேர்ந்து வாழ நிறைய தடைகள்.

   தேவசேனா தன் அண்ணனுக்காக வீரா குடும்பத்தில் நுழைந்து எதிர்பாராமல் வீராவின் மனைவி ஆகிறாள். அவனுடன் சேர்ந்து வாழ முடியாமல் தவித்து, அவனை விட்டு விலகி ஓடுபவள் அவனது அன்பை புரிந்து கொள்கிறாளா? அவளுக்கும் அருணாச்சலத்திற்கும் என்ன சம்மந்தம்? விஷ்ணு யார்? அவன் ஏன் வீராவின் குடும்பத்தில் குழப்பங்களை உண்டாக்குகிறான்? அருணாச்சலத்திற்கும், வீரா குடும்பத்திற்கும் என்ன பகை? இப்படி பல கேள்விகளுக்கான பதில்கள் இறுதியில் தெரிகிறது. எதிரி கும்பலுக்கு எல்லாம் எப்படி தண்டனை கொடுத்தாலும் பத்தாது...

ஜெயக்குமாரி, யமுனா, சந்திரன், விஷ்ணுப்ரியா, விநாயகம் அவன் மனைவி சகுந்தலா, குறிப்பாக ஸ்ரீ குட்டி ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அருமை 👌👌  

மொத்தத்தில் அருமையான குடும்ப நாவல் படித்தேன்... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍


*****

அப்சரஸ் பீனா லோகநாதன் சகோதரியின் விமர்சன பதிவு :



அக்னி தீர்த்தம்
ஆசிரியர் : ஆனந்த ஜோதி

இரு பெரிய குடும்பம்
இருவருக்குமான பிரச்சனை 
இறப்பும் வஞ்சமும்
இரண்டு குடும்பத்தை பகையாக்க 
இனி சேராது என பிரியும் 
இவர்களை 
இணைக்கும் பாலம் எதுவோ????

பழி தீர்க்க நினைக்கும்
பலி எடுக்கும் வஞ்சமும் 
பார்த்தாலும் ஒதுங்கி 
பிரிந்து செல்லும் நெஞ்சமும்
பகை பிரிக்கும் மனதை
பாசம் சேர்த்து வைக்குமா??? 

வீரபாண்டியன்...
பெயருக்கு ஏற்றவாறு 
வீரமும் விவேகமும் கொண்ட
பாயும் புலி.....
பார்வையில் தெளிவும்
பேச்சில் நிதானத்தையும் 
பார்ப்பவர்களுக்கு தானாக 
பணிந்து செல்ல வைக்கும் 
மரியாதையும்
கம்பீரமும் கொள்ளை அழகு....
தந்தை வார்த்தை மீறாத தனையன் 
தாய் மனதை புரிந்தும்
தவிக்க விட்ட போதும்
தவிர்க்க முடியாமல் 
தவிக்கும் மகன்...
தன் தங்கைக்கு 
தந்தையாக முன் நின்று
திருப்தியாக அனைத்தும் செய்யும் அண்ணனாக 
தன் தம்பி மகளை 
தன் மகளாக அன்பு செலுத்தும் பாசமான
பெரியப்பாவாக....
அருமையோ அருமை....

துறு துறுப்பான பெண்
தன்னம்பிக்கை கொண்ட 
திடமான பெண்...
தன் மாமன் மகனை 
தொடர்ந்து வம்பு செய்யும்
தேவதை இவளோ ......
தேவி இவள் யாரோ????

அருணாச்சலம் .....
இவரின் மூலம் தான் 
பகைமை தொடங்குகிறது..
இவரின் மூலம் தான்
பகையும் முடிவு பெறுகிறது.....

தன் மகனுக்கு 
தன் அண்ணன் மகளை எடுத்து
தன் அண்ணன் வீட்டில் 
தன் மகளை வாழ வைக்க 
தங்கையாக ஆசை பட...
தங்கை மனம் அறியாது
தன் மகனுக்கு வேறு 
தன்னால் காப்பாற்றபட்ட 
தங்கசிலையான பெண்ணை முடிக்க 
திட்டமிட....
தங்கை அண்ணன் சண்டையில் 
திருமண கனவில் இருக்கும் 
இரு உள்ளங்கள் பிரிந்து வாட.....
வீராவின் வீர விளையாட்டு ஆரம்பம்....

மான் ஒன்று புலியுடன் மோதும் அதிரடி ஆட்டம்...
மங்கையின் மனதில் 
நஞ்சை வளர்க்கும் 
பதுங்கி இருந்த நரி ஒன்று
நட்பாய் கரம் நீட்டி 
நடுவில் மறைந்து போக...

உண்மை அறிந்த மான் 
உள்ளுக்குள் மருகுவதும் 
உரிமையில் தவிப்பதும் 
உதறி விட்டு விலகிச் செல்லும் நேரம் 
உரிமையை நிலைநாட்ட 
உடலும் உள்ளமும் 
உரியவனிடம் சேர்ந்து விடுகிறது.....

பெற்றவர்களுக்காக திருமணம் 
பெண்ணிற்கு பிடிக்காத 
பந்தம் 
பிரிந்து செல்ல துடிக்கிறது...
கணவன் மனைவிக்குள்
நடக்கும் 
ஆடு புலி ஆட்டம் அற்புதம்....
உன்னை நான் அறிவேன் என கணவன்...
உனக்காக தான் நான் விலகுகிறேன் என 
மனைவியும்.....
விலகிச் செல்ல விடமாட்டேன் 
விரும்பியே உன்னை அழைக்கிறேன் என
விடாப்படியாக மனைவியை தன்னுடன் நிறுத்தும் 
தேவியின் தேவன்....

திருமணத்திற்கு முன் 
தன் அண்ணனுக்காக பேசும் தங்கை திருமணத்திற்கு பின் 
தன் கணவனுக்காக தூக்கி இருந்து பேசும் தங்கை....
சேர்க்கையும் காலமும் சந்தர்ப்பமும் ஒருவரை எப்படி எல்லாம் மாற்றுகிறது......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
பூக்களின் நடுவே
புன்னகை பூக்கும் 
பெண்ணின் சிரிப்பு 
பேரழகு தேவசேனா.....
மல்லியின் வாசத்திலா 
மங்கையின் நேசத்திலா 
மன்னன் மயங்கும் இடம் 
மனதை மயக்குகிறது....
💟💟💟💟💟💟💟💟
குட்டி பெண் ஶ்ரீ
சிரிப்பில் பெரியப்பாவை 
கொள்ளை கொள்ளும் 
சுட்டி பெண்....
🧚🧚🧚🧚🧚🧚🧚
ஆடல் போட்டி
திருவிழா 
விளக்கு பூஜை
ஊர் காரணம் 
பெயர்க் காரணம்
தலைப்பு காரணம் 
என்று ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களில் கூட 
விளக்கும் போது 
ஆசிரியரின் 
மெனக்கெடல் தெரிகிறது....

( நாயகி மற்றும் உறவுகளின் 
பெயர்களை குறிப்பிடாமல் ஒரு விமர்சனம்.... புரிகிறதா என்று தெரியவில்லை ஆனால் படிக்கும் போது புரியும் ஏன் நான் பெயர் குறிப்பிட வில்லை என்பது) 

விறுவிறுப்பாகவும் 
வித்தியாசமாகவும் இருக்கும் 
விரும்பி படிக்கலாம்....
தேடல் பயணம் சுகமாக முடியும்....

( Tamil novel writers site la போட்டி கதை....)
https://www.tamilnovelwriters.com/community/forums/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BFs-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.1071/

வாழ்த்துக்கள் சகி 👏👏👏👏💐💐💐💐💐👍🏻👍🏻👍🏻👍🏻

******

Amirtha Seshadri :


****

 Sengottuvel Nkl சகோதரியின் விமர்சன பதிவு:


🙏🌹 வணக்கம் சிஸ்டர்.

 அக்னி தீர்த்தம் ஒரு அருமையான கதை.

எத்தனை கதாபாத்திரங்கள் எத்தனை வகையான மனிதர்கள். அனைவரும் பல வகையான குணாதிசயங்கள், பிரித்தரிய முடியாத பாசங்கள் என நல்ல கதையம்சம் சிஸ்டர் .

 வீராபாண்டின் தேவசேனா இருவரும் அருமையான ஜோடி♥️♥️
😠😡 அருணாச்சலம் அனைவரையும் கோபம் கொள்ள வைக்கும் கேரக்டர்.
வீரபாண்டியனின் அலசி ஆராயும் திறனும் பொறுமையும் அருமை. சரியான சமயத்தில் சரியாக நடந்து கொள்ளுகிறார்.   

👍👍எது எப்படியோ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும் என்பதற்கு ஏற்ப கதை அமைந்துள்ளது 👌👌

நல்ல குடும்பப் பங்கான கதை. தலைப்பு அருமை சிஸ்டர்.

அக்னி தீர்த்தம் 

அக்னியில் குளித்தால் தீர்த்தம் குளிர்விக்கும்.
அக்னி தீர்த்தத்தில் குளித்தால் புண்ணியம் சேர்க்கும்.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்🙏🙏

*****

மிருதுளா அஸ்வின் சகோதரியின் விமர்சன பதிவு :



அக்னி தீர்த்தம் - பெயர் காரணம் அருமை.



அக்னியோடு தீர்த்தம் சேர, இதமான குளிர்ச்சியும், இன்பமும் மனதில் தோற்றுவித்தது.



அக்னி தீர்த்தம் - சீதா தேவியை மக்கள் குறை கூறினாலும், ராமர் ஒரு நாளும் அவளை இன்னல்களுக்கு உட்படுத்தவில்லை. மற்றவர்களின் சொல்லுக்கு செவி சாய்த்து, தான் கணவன் எந்த வித அவமானத்துக்கும் ஆளாகக் கூடாது என்று நினைத்தாள் சீதாபிராட்டி. சீதாவின் முடிவு தான் அக்னியில் இறங்கியது. அதே போல, வீரா தேவாவிற்கு உற்ற துணையாக இருந்தான். அவளாக எடுத்த முடிவையும் மதித்து பார்வைக்கு விலகி, அவளுக்கு அனைத்தையும் செய்தான் வீரா.



இரு குடும்பமும் யாரோ செய்த குற்றத்தில், ஒருவரை ஒருவர் பழி சொல்ல, பாவம் அதை அவர்களே அறியாமல் இருந்தார்கள். இதில் எவ்வளவு உயிர் பலியாகி விட்டது.



தேவா வீரா காதல் வென்சாமரம் வீசுவது போல இருந்தது.



ஜெயகுமாரி, சகுந்தலா இருவரும் நல்ல பெண்மணிகள். இதில் சகுந்தலா எனக்கு மிகவும் பிடித்தது. மேகலா தன் நிலையில் சரியாக இருந்தாள். விஷ்ணுபிரியா நல்ல தாய்மையோடு பெண்ணை போற்றி பாதுகாத்து வாழ்க்கை கொடுத்துள்ளார். இதில் சந்திரிகா, யமுனா சங்கீதா மூவரும் மேலே சொன்ன நான்கு பெண்களுக்கும் அப்படியே எதிர் துருவம்.

சிந்திக்கும் மூளையை கொடுக்கவில்லை போல..



அருணாசலம் என்ன சொல்ல.. பாவம் அவர் வாழ்வு.. இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம். நண்பனை நம்பி கூட சேர்த்தது அவரையே பலி வாங்கிவிட.. பெற்ற மகளை கூட ஆங்கீகரிக்க இயலவில்லை.



சந்திரன், விஷ்ணு கேட்பார் பேச்சை கேட்டாலும் கடைசியில் தன் சொந்த புத்தியை உபயோகித்து தர்மம் பக்கம் சேர்ந்துவிட்டார்கள்.



வீரா one man army ஆக எல்லா இன்னல்களையும் கடந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நன்றாக கவனித்து வந்தது நன்று. ஶ்ரீ பாப்பா அழகு அற்புதம்.



மொத்தத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளர் அவர்களே.

******

Kalai Karthik சகோதரியின் விமர்சன பதிவு :


அக்னி தீர்த்தம் ஆனந்த ஜோதி sis எழுதி முடித்த போட்டிக்கதை அருமை.

கதையில் காதல், பாசம், நட்பு, துரோகம், சஸ்பென்ஸ் என கலந்து கொண்டு போயிருக்காங்க. 

வீரபாண்டியன் ஹீரோ. இவன் கல்யாணம் செய்ய நினைக்க மறுக்கிறான். என்ன காரணம் என்று சுற்ற விடுகிறாங்க. தங்கையின் காதலையும் பிரிக்க நினைக்கிறான் ஏன் என்று சஸ்பென்ஸ் போகிறது.

தம்பி ஆசைப்பட்ட பெண்ணை மணமுடித்து, அவனுக்கு மகளும் இருக்கிறாள். வீரா அம்மா பேச்சை கேட்பது இல்லை என்று டூ மச் நினைக்க தோன்றுகிறான்.

தேவா இவள் அண்ணா கல்யாணத்துக்கு வர சூடு பிடிக்கிறது கதை. வீராவை அத்தான் மச்சான் என்று கூப்பிட்டு பின்னால் சுற்றுவது சூப்பர். 

யமுனா அண்ணாவுக்காக காதலை மறைக்க, சந்திரன் இவள் மீது கோபம் கொண்டு வேற பெண்ணை மணக்க தயாராக, வீரா அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் தேவாவை கல்யாணம் செய்ய, தேவா வீரா இருவருக்கும் இடையில் புலி மான் ஆட்டம் தொடர, தேவா வந்த காரியம் முடிந்தது என்று கிளம்ப, கணவன் மனைவி எப்படி இணைகிறார்கள்? யார் வில்லன்? தண்டனை என்ன? என்று கடைசியில் சொல்லி இருப்பது சூப்பர். 

வாழ்த்துகள் sis. வாழ்க வளமுடன்.

*****

Lakshmi Ramamoorthy சகோதரியின் விமர்சன பதிவு:


அக்னி தீர்த்தம் கதையைச் சுபமாக முடித்துள்ளீர்கள்.

யார் வில்லன்? சேனா யாருடைய பெண்? என்ற கேள்விக்கு யூகிக்க முடியாமல் வாசகர்களை அழைத்துச் சென்றீர்கள்.

இப்பவும் கூட வீரனின் கட்ட பொம்மன் வீர வசனத்திற்கும், அவன் இறுதி தண்டனைக்கும், தேவி மட்டுமில்லாமல் அனைவரையும் கண்கலங்க வைக்கும் என்பது உண்மை.

வீராவை ஆரம்பம் முதலே நடிகனாகவும், நேர்மையானவனும், 
உறவுகளை மதிப்பவனுமான கதாநாயகனாகவே சித்தரித்துள்ளீர்கள்.

வீரம், பகை, காதல் கலந்த தீர்த்தம்.

வீரா, தேவசேனாவுக்கு அவளது அப்பாவே மகனாகப் பிறக்கட்டும்.

ஒவ்வொரு சஸ்பென்ஸாக அழகாக உடைத்து விட்டீர்கள்.

வாழ்த்துக்கள்.

*****

Jeya Rajan சகோதரியின் விமர்சன பதிவு:


அக்னி வீரா தான்.

குடும்ப கதை என்றதுமே உடனேயே படித்து முடித்து விட்டேன். மிக மிக அருமையான குடும்ப கதை. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனிதர்கள். படிக்க படிக்க அவர்களுடனே வாழ்ந்தது போன்று ஓர் உணர்வு. 

வீரா, தேவா சூப்பர். வீரா அக்னியே தான்.

ஒரு நல்ல குடும்ப கதை படித்த மனநிறைவுடன், போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
.

*****

Chitrasaraswathi சகோதரியின் விமர்சன பதிவு:


தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை ஆனந்த ஜோதியின் அக்னி தீர்த்தம் எனது பார்வையில். 

வீட்டின் மூத்த மகன் வீரபாண்டியன் விரும்பத்தகாத நிகழ்வுகளால் நின்று போன தங்கை யமுனாவுடன் அத்தை மகன் சந்திரனுடனான திருமணம் அவர்களது வாழ்வில் பல இழப்புகளைத் தருகிறது. 

அத்தை சங்கீதாவின் கணவரின் அண்ணன் அருணாசலம்தான் இதற்கு காரணம் என்று அவருடன், அத்தை வீட்டினரையும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். 

தம்பிக்கு திருமணம் செய்து வைக்கும் வீரா தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்கிறான். யமுனாவின் திருமணம் முடிவானதால் சந்திரனுக்கும் வேறு இடத்தில் திருமணம் முடிவாகிறது. இந்த திருமணத்திற்கு வரும் உறவுப் பெண் தேவசேனா, அண்ணன் சந்திரனின் யமுனாவின் மீதான விருப்பம் தெரிந்து, இருவரையும் இணைத்து வைக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அந்த திருமணத்திற்கு முன் வீராவுடன் அவளுக்கு அவசரத் திருமணம் நடக்கிறது. 

அதற்கு பின் அவளது முயற்சி வெற்றி பெற்றதா? இரு குடும்பங்களின் பகை முடிவுக்கு வந்ததா? இரு குடும்பங்களின் பகைக்கான காரணகர்த்தாவை பழிவாங்க முடிந்ததா? என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார் ஜோதி. வாழ்த்துகள்மா.

*****

Deebas Novels சகோதரியின் விமர்சன பதிவு:

கதை: அக்னி தீர்த்தம் 
ஆசிரியர் : ஆனந்த ஜோதி 
      
        அண்ணன் தங்கை உறவுக்குள் நடக்கும் போராட்டம். அவர்களின் வாரிசுக்குள் முறைப் பெண் பிள்ளை ஈர்ப்பால் உண்டாகும் காதல். அக்காதலை அறியாமல் பெரியவர்கள் ஜோடி மாற்ற முயன்றதால் உண்டான அனர்த்தங்கள். 

     அதனால் இரு குடும்பங்களுக்கு இடையே உண்டாகும் பகை, அப்பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் எதிரிகள். 

     ஆக மொத்தத்தில் அந்த எதியின் சூழ்ச்சியில் பலியாகியவர், எல்லோருடைய பார்வையிலும் கெட்டவர் என்று புரிந்துகொண்ட ஒரு அப்பாவி மனிதர். கடைசியில் உயிரையும் விட்டு, அனைவரின் மனதிலும் இடம்பிடிக்கிறார். 

      இவ்வாறான பல கதாபாத்திரங்களை கொண்டு புனையப்பட்ட கதைக்களத்தை ஆசிரியர் சிறப்பாக கையாண்டிருக்கிறார், 

     "உறவுகள் தங்களுக்குள் உட்கார்ந்து மனம்விட்டு பேசினால் பல அனர்த்தங்களை, உயிரிழப்புகளை, மன வருத்தங்களை தவிர்க்க முடியுமெனவும், அதற்கான பக்குவம் எல்லோருக்கும் வாய்க்காது, சிலருக்கு தானாக உண்டாகும், சிலருக்கு அனுபவம் அதை ஈட்டி கொடுக்கும். பக்குவம் வாய்த்தவர்கள் ஹீரோவாகிறார்கள்" என்ற எண்ணம் இக்கதை வாசிப்பில் எனக்குள் தோன்றிய முனுமுனுப்பு,,
 
    இக்கதையில் நாயகன் வீரபாண்டியும் நாயகி தேவசேனாவும் மோதல் காதல் ஊடல் கூடல் என்று அழகாக கதையில் பயணித்து குடும்பங்களுக்குள் ஒற்றுமையை உருவாக்கும் விதம் அருமை.

     போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். தொடர்ந்து நிறைய படைப்புகள் கொடுக்க வாழ்த்துகள்.

தீபாஸ்

******

சித்ரா தேவி :


அக்னி தீர்த்தம் கதை ரொம்ப அருமையான விறுவிறுப்பான நாவல். குடும்ப நாவலில் இந்த அளவுக்கு ட்விஸ்ட் எதிர்ப்பார்க்கவே இல்லை. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது.

இந்த கதையில் வீரபாண்டியன் எனக்கு ரொம்ப பிடித்த கதாபாத்திரம். அருமையான அண்ணன், அருமையான மகன், அருமையான மருமகன், அருமையான காதலன், இந்த கதை முழுவதும் அவனை மட்டும் தான் பிடிக்குது. தேவசேனா, யமுனா யார் என்ன சொன்னாலும் நம்பிடுறாங்க. அவங்களுக்கு அவங்க தப்பை உணர வைக்கிறான் வீரா. அது மட்டுமல்ல தன்னுடைய மனைவிக்கான மரியாதையை ஏற்படுத்திக் குடுக்குறான். அந்த ஒரு விஷயத்துலேயே நான் ப்ளாட். 

அப்புறம் மாதவன், சந்திரிகா வாய் திறக்க வேண்டிய இடத்தில் மௌனமாக இருந்து பல குழப்பத்துக்கு காரணமா இருக்காங்க. 

அருணாசலம் தன்னுடைய மறுப்பை போட்டு உடைத்து கூறாத காரணத்தாலே வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கிறார். பரிதாபத்திற்குரியவர்.

கதையில் எத்தனை கதாபாத்திரம் வந்தாலும், எல்லோருமே மனதில் அழுத்தமாக பதிந்து விட்டனர்.

கதை ஆரம்பத்த இடத்திலே முடிப்பது அருமை. அருமையான எழுத்து நடை. அக்னி தீர்த்தத்தைப் பற்றி அழகான விளக்கம் எல்லாமே சூப்பர். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் ❤️❤️❤️❤️❤️

******

வித்யா வெங்கடேஷ் :



*****

சுபகீதா :


*****

Ahila Vaikundam :

அக்னி தீர்த்தம் ஒன் லைன்ல சொல்லணும்னா பீல் குட்  ஸ்டோரி,திருமணத்திற்கு பிறகான காதல் கதை ,ரொம்ப என்ஜாய் பண்ணி படிச்சகதை,வீரபாண்டியன் - தேவசேனா என்ன சொல்ல

தேவசேனா குடும்பத்துக்காக வந்து திடீர்னு திருமண பந்தத்தில் இணைந்து அதுக்குள்ள தன்னை இணைத்துக்க முடியாம அவ போராடறது , வீரா அவளை கையாளற விதம் எல்லாமே  அருமை ,

யமுனா ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம் ,சந்திரசேகர் மேல முதல்ல கோபம் வந்தாலும் அதன் பிறகு சரி பண்ணிடறான் ,

எரிச்சல் தர்ற கரெக்டர் அருணாச்சலம் கடைசில கொஞ்சம் ஓகே னு சொல்ல வச்சிட்டாரு  ,ஸ்ரீ கியூட் ,விஷ்ணுபிரியா கிரேட் மம்மி ,மொத்தத்துல வொர்த் ரீடிங் 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா .

*****

Icroline :

ஆனந்த ஜோதி அவர்களின், 'அக்னி தீர்த்தம்' கதை அருமை. காதல், வன்மம், பகை, பழி தீர்ப்பது என பல கதைகளிலும் நிஜத்திலும் பார்த்திருந்தாலும் இவை அனைத்தும் மாறாத ஒன்றுதான்.

குடும்ப உறவாக இருந்தாலும் சரி,  நட்பு என்றாலும் சரி, எந்தவொரு விஷயமாக இருந்தாலும் தீர விசாரிக்காமலும் வெளிப்படையானத் தெளிவானப் பேச்சும் இல்லை என்றால், பல முடிவுகள் தவறான வழியை வகுக்கும் என்பதையும், தீரா பகையை உண்டாக்கிப் பல உயிர்கள் பலி ஆவதற்கு வழி வகுக்கும் என்பதையும் கதையில் தெளிவாக உணர்த்தி இருக்கிறார் ஆசிரியர்.

கதையின் முடிவு வரை குடும்பத்தில் ஏற்பட்டப் பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்பது எதிர்பாராதத் திருப்பம். முதல் அத்தியாத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடக வசனம் கேட்டு கேட்டு மனப்பாடம் ஆனது என்பதால் படித்ததும் தூங்கிட்டேன்.😂😂😂 என்னடா முதல் அத்தியாயமே தூங்கிட்டமேன்னு இரண்டு நாள்கள் கதையைப் படிக்கலை. இரண்டாவது அத்தியாயம் படிக்கத் தொடங்கியதும் கதையை முடித்தப் பிறகுதான் இரவு மூன்று மணிக்கு தூங்கினேன்.

கதையின் போக்கு, கொண்டு சென்றவிதம் எல்லாம் அருமை. கூட்டுக் குடும்ப உறவுகளின் பாசம், அவர்களின் மனநிலையை அழகா சொல்லியிருக்காங்க.  அடாவடித்தனத்துடன் கூடிய மென்மையான, முகம் சுளிக்காத காதல், பாண்டி, தேவசேனா காதல். ஆனந்தஜோதி அவர்களின், 'அக்னி தீர்த்தம்' கதை மிக அருமை. படிக்காதவங்க படிச்சுப் பாருங்க. போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் சகி.

*****

Parvathi Thiyagarajan :

https://www.facebook.com/share/p/Nnzv43LEkmzcCNAK/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/pgB4ZxkWpD1XDLeM/?mibextid=oFDknk

அக்னிதீர்த்தம் _ ஆனந்தஜோதி. சாமி ஹரி வானத்தைபோல விக்ரமன் combo ல ஒரு படம் பார்த்த பீஃல். ஆங்காங்கே மலையாளதேசத்து வாசனையுடன் கேரளாவின் இயற்கைஅழகை மானசீகமாய் ரசிக்க வைத்த வர்ணனைகள்.குடும்பக் கதையிலும் சஸ்பென்ஸ் வைக்க முடியும் என்று உணர்த்திய இக்கதையில் ஒரே ஒரு குறை.என்னைப் போன்ற பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நபர்களுக்கு கதையின் நீளம் அதிகம். நானெல்லாம் சில எபி படித்தவுடனேயே முந்திரிக்கொட்டையாய் முடிவைப் படிக்க தாவும் அவசரக்குடுக்கை.ஆனால் இந்த கதையில் அப்படி தாவினால் ஒன்றும் புரியாமல் தலை சுற்றிப் போகும்.அந்த அளவிற்கு கதையின் நடுவில் ஏகப்பட்ட ட்விஸ்ட் அன் டர்ன்ஸ்.மற்றபடி உறவுகளின் பெருமையை கூட்டுக் குடும்பத்தின் மகிமையை உரக்கச் சொன்ன ஆசிரியருக்கு போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.👍




....... மீம்ஸ் .

https://m.facebook.com/groups/tamilnovelwriters/permalink/2707694846196487/?mibextid=Nif5oz

https://m.facebook.com/groups/tamilnovelwriters/permalink/2707459892886649/?mibextid=Nif5oz

Comments