#எழுத்தாளர்விவாதமேடை
இது நம்ம ஏரியா
உங்க பெயர் : சங்கரகோமதி @ கோமதி அருண்
படிப்பு : B.E. Computer Science
ஊர் : சொந்த ஊர் திருநெல்வேலி, வசிப்பது சென்னை
பணி : இல்லத்தரசி, எழுத்தாளர்
தளம் : MM
https://mallikamanivannan.com/), Eread(https://eread.club/)
அமேசான் லிங் :
https://www.amazon.com/~/e/B08NT759CD
முகநூல் லிங் :
https://www.facebook.com/gomathy.arun
எழுத்தாளர் அறிமுகப்படலம் லிங்:
https://jothitamilnovels.blogspot.com/2021/08/blog-post_99.html
உங்கள் படைப்புகளின் பெயர்கள் :
1. என்னுள் நிறைந்தவனே!!
2. யாருக்கு யாரோ??
3. மழைக்காலம் (முடிவு பெறவில்லை.. part2 எழுதணும்)
4. தீண்டத் தீண்ட மலர்வதென்ன!! (இரண்டு பாகங்கள் கொண்ட கதை)
5. நித்தமும் உன் சிந்தனையே!! – crime story
6. நெஞ்சோரமாய் காதல் துளி!!
7. இதயம் தேடும் தேடல்!!
8. இதழ் திறவாய்!!
9. விட்டாலும் விலகாதே!!
10. எனை கொஞ்சும் சாரலே!!
11. ஏன்டி உன்னை பிடிக்குது!!
12. மதி ஒரு நாளும் மறவேன்!!
13. மண(ன)ம் வீசாயோ நேசப்பூவே!
14. புல்லாங்குழலே! பூங்குழலே!
15. சாட்சி பிழையா? – crime story
16. எமபுர மாயமும் அபயனும்! – முடியும் தருவாயில் இருக்கிறது.
தற்சமயம் எழுதிக் கொண்டிருப்பதன் லிங் =
https://eread.club/index.php/snax_collection/15357/
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய எழுத்தாளரின் படைப்புகளை வாசித்திருபவர்களா நீங்கள்? அப்படியானால் அவருடைய 16 படைப்புகளில் நீங்கள் எத்தனை வாசித்திருக்கிறீர்கள். உங்களுடைய மனதை வெகுவாக கவர்ந்த படைப்பாக நீங்கள் நினைப்பது எதை? அந்த எழுத்தாளரின் படைப்புகளில் நிறை குறை உள்ளதாக நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் அது என்னவென்று சுட்டிக்காட்டுங்கள். அந்த எழுத்தாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பதையும் கேள்விகளாக முன் வையுங்கள் .
நன்றி
எழுத்தாளரின் எழுத்துகளில் "இதழ் திறவாய் " மிகவும் அருமையான படைப்பு.
ReplyDeleteதிருமணமாகி மகளுடன் தனித்திருக்கும் நாயகி மீதான ஐந்து வருட காதலில் தவித்துப் போயிருக்கும் நாயகன், எங்கனம் அவள் மனதை மாற்றுகிறார்? எதனால் இருவரும் பிரிந்தார்கள்? அவளது திருமணம் முடிந்த பிறகு நடந்தது என்ன ? அந்த குழந்தை அவளது கணவருக்கு பிறந்ததா என பல கேள்விகள்... இதில், நாயகன் இழ்கள் அடைத்துக் காணப்படுவது எப்போது மலர்கிறது என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு அத்தியாயம் தோறும் எதிர்பார்ப்பாக இருந்தது.
மற்றுமொரு ஜோடி சர்வேஷ் அது😂😂😂 சரியான கலாட்டா. முரட்டு பீஸ் எப்படி தான் பூனைக் குட்டியை போய் சைட் அடிச்சு, வலையில விழ வச்சு,😂😂😂 செம சூப்பர்.
இரண்டு ஜோடிகளும் அட்டகாசம் சிஸ்டர். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை இது.
"நெஞ்சோராமாய் காதல் துளி"
ReplyDeleteபெரியப்பா மகளை மணந்து கொள்ள வந்து, திருமணம் மாறி சித்தப்பா மகளை மணந்துகொண்டு முதலில் கீரியும் பாம்பும் போல சீறிக் கொண்டு , பிறகு நாயகியின் குறும்புத்தனமான சேட்டையில் மனம் மாறி வருபவன், சந்தர்ப்ப சூழ்நிலையால் கோபமாக பேசி பிணக்காவது ... என்று நகர்வது.
நாயகியின் குறும்புத்தனமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, முதலில் வாசித்த போது ஹீரோவைப் பார்த்து நானும் பெரிய முரட்டு பீஸு போலவே ன்னு நினைச்சேன். ஆனால் பாவம் தங்கமான மனுசன் என்பது பிறகே தெரிந்தது.
" ஏண்டி என்னைப் பிடிக்குது" கனவு பட்டறை போட்டிக்கதை. நிறைய கதாபாத்திரங்கள், எதிர்பாராத முடிவு. சஸ்பென்ஸ், டுவிஸ்ட் என்று அட்டகாசமாக இருந்தது.
ReplyDeleteமுதலில் ஹீரோ யாருன்னே தெரியல. பாதிக்கு பிறகு அமர்களம். புகழ், மனோஜ், ஏசிபி வெற்றிவேல், பிரசாத் அத்தனையும் அழகான கதாபாத்திரங்கள். ஆனால் எனக்கு பிரசாத் தான் பேவரைட்.
நாயகி மித்து சரியான சண்டி ராணி. அவளுக்கு எப்படிடா அம்மாஞ்சி போல இருக்கும் மனோஜ் பொருத்தமாக இருப்பான்னு நினைச்சேன். கதை அப்படியே மாறிப் போயிட்டு😂😂😂. அவனோட அப்பா மனுசனா ச்சே... அப்படியே என்கவுண்டர்ல அனுப்பி விட்டிருக்க வேண்டியவன்.
மனோஜ் ரொம்ப பாவம்.
"மழைக்காலம்" கல்லூரி கலாட்டா. இந்த கதை வாசித்த போது அந்நாள் கல்லூரி வாழ்க்கை கண்முன் படமாக விரிந்தது
ReplyDelete"யாருக்கு யாரோ"
ReplyDeleteமூன்று ஜோடிகளின் காதல் மாறி மாறி நடக்க யாருக்கு யாரோ என்பதை இறுதி வரை சஸ்பென்ஸா கொண்டு போயிருக்கீங்க.
இதில் கௌதம் ரொம்ப பாவம். சித்தார்த்தன் நைஸ் பெர்சன் நண்பனுக்காக அவன் எடுத்த முடிவு👌👌👌
இன்னும் ஒருத்தர் பெயர் மறந்துட்டு. அவரின் காதல் மனதில் மட்டுமே அவர் கூற கேட்டவளின் மாற்றம்👌👌.